கழுகார் பதில்கள்!

@க.பூமிபாலன், கோவை.
எந்த அரசு அலுவலகமாக இருந்தாலும் மக்களைத் தூசாக நினைக்கும் அரசு அதிகாரிகளைப் பற்றி?


நாம் லூசாக இருக்கும் வரை அவர்கள் மாறமாட்டார்கள்.

@வெங்கடேசன் கன்னியப்பன்
இந்திய அரசியல் வரலாற்றில் பதவிகளில் இல்லாமலேயே பல்லாயிரம் கோடிகளைச் சம்பாதித்த குடும்பம் இதற்கு முன் ஏதாவது உண்டா?


அறிவுக்கு எட்டிய காலம் வரை, நமக்குத் தெரிந்து இந்த ஒரேயொரு குடும்பம்தான்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.
மக்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது அதிகச் செலவில் தயாரிக்கப்படும் படங்களையா, குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களையா?


தங்களின் மதிப்பு மிக்க நேரத்தைச் செலவிடும் அளவுக்குத் தரமாகத் தயாரிக்கப்படும் படங்களை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick