நான் அடிபட்ட பாம்பு... ஜாக்கிரதை! - சீறும் கருணாஸ் | Karunas MLA interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நான் அடிபட்ட பாம்பு... ஜாக்கிரதை! - சீறும் கருணாஸ்

‘அரசியலில், நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை’ என்கிற உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி - கருணாஸ் எம்.எல்.ஏ சந்திப்பு. டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட கருணாஸின் இந்த திடீர் ‘யு டர்ன்’ பற்றி அறிய அவரை நேரில் சந்தித்தோம்.

“ ‘தொகுதிப் பிரச்னைகளுக்காக முதல்வரைச் சந்தித்தேன்’ என நீங்கள் சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது?’’

“என்னைப் பதவிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நான் சபாநாயகருக்கு எதிராக ஒற்றை ஆளாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தேன். அந்தத் தீர்மானம் சபையில் வாக்கெடுப்புக்கு வந்திருந்தால், நான் ஒருவன் மட்டுமே வாக்களித்து, அது படுதோல்வி அடைந்திருக்கும். ஆக, ஆர்வக்கோளாறினால் நான் செய்த காரியம் அவமானத்தை ஏற்படுத்திவிடும். இந்த அசிங்கம் எனக்கு வேண்டாமே என்று கருதித்தான் கோட்டைக்குச் சென்று தீர்மானத்தை வாபஸ் பெற்றேன். வந்த இடத்தில் அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டதால், முதல்வரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அப்போதும் என் தொகுதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு கேட்டேன். இதுதான் உண்மை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick