வெங்‘காயம்’! - கண்ணீரில் விவசாயிகள் | Farmers worry for onion prices fall - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெங்‘காயம்’! - கண்ணீரில் விவசாயிகள்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி, குறைத்தீர்ப்புக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தமிழக அரசின் விவசாயத் திட்டங்களையும் சலுகைகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அதிகாரிகள். அதே ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் இன்னொரு காட்சி. “ரூபாக்கு ஒரு கிலோ... ரூபாக்கு ஒரு கிலோ... ஒரு கிலோ வாங்கினால், இன்னொரு கிலோ இலவசம்...’ என்று கூவிக் கூவிச் சின்ன வெங்காயத்தை விற்றுக் கொண்டிருந்தார்கள் விவசாயிகள். பலரும் வாங்கியது போக இன்னமும் மீதம் இருந்தது வெங்காயம். ஒரு கட்டத்தில் யாரும் வாங்கவரவில்லை. நொந்து போனவர்கள் மிச்சமிருந்த வெங்காயத்தை அப்படியே சாலையிலேயே கொட்டிவிட்டு, தலையில் அடித்தபடியே கிளம்பிப் போனார்கள். வெங்காய விவசாயிகளுக்கு வேதனையுடன் விடிந்திருக்கிறது புத்தாண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick