“பெருமாளே..!” - பிரமாண்ட சிலை... இடிபடும் வீடுகள்... அலறும் மக்கள்! | 380 ton Lord Perumal statue travels to Bengaluru from Vandavasi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“பெருமாளே..!” - பிரமாண்ட சிலை... இடிபடும் வீடுகள்... அலறும் மக்கள்!

ர்நாடகா மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றுக்காக, 380 டன் எடை கொண்ட பிரமாண்டமான பெருமாள் சிலை ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், மிதமிஞ்சிய எடை மற்றும் பிரமாண்டமான அளவு காரணமாக, சிலை செல்லும் வழியெல்லாம் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். போதாக்குறைக்குச் சிலை செல்ல வழி ஏற்படுத்துவதற்காக வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுவதால், பெரும் வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் மக்கள்.

பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ளது கோதண்ட ராமசாமி கோயில். அங்கு பிரமாண்டமான வடிவத்தில் பெருமாள் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் ஒரே கல்லில் ஆன இரு பாறைகளைத் தேர்ந்தெடுத்தனர். மத்திய அரசு மூலம் தமிழக அரசிடம் பேசி, கோயில் நிர்வாகக் குழுவினர் அந்தப் பாறைகளை வெட்டுவதற்கு அனுமதி வாங்கினர்.

2014, அக்டோபரில் பாறைகள் வெட்டும் பணிகள் தொடங்கின. பாறைகளை வெட்டி, அங்கேயே 64 அடி நீளம், 24 அடி அகலம், 380 டன் எடை கொண்ட பெருமாளின் முகம், இரு கரங்கள், சங்கு, சக்கரம் ஆகியவை செதுக்கப் பட்டன. அதை அப்படியே பெங்களூரு எடுத்துச் சென்று அங்கே சிலையை முழுமையாகச் செதுக்குவது என்று முடிவுசெய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick