காவு வாங்கும் கள்ளந்தரி கால்வாய்! | Madurai Kallanthiri Canal dangerous area - Junior Vikatan | ஜூனியர் விகடன்

காவு வாங்கும் கள்ளந்தரி கால்வாய்!

எச்சரிக்கை... இங்கே செயற்கை சுழல் உள்ளது

“எல்லாரையும் மாதிரிதானே நாங்களும் குளிக்க வந்தோம். இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தால் இந்தப் பக்கமே நாங்க வந்திருக்க மாட்டோமே!” என்றபடித் தனது தம்பியின் சடலத்தை மடியில் போட்டுக்கொண்டு கதறிய பள்ளி ஆசிரியர் சிபியின் அழுகுரல் நெஞ்சை உலுக்குகிறது. கள்ளந்தரி கால்வாயில்தான் இப்படி ஒரு கதறல். உள்ளூர் மக்களிடம் விசாரித்தால், “இந்த இடத்துல இதெல்லாம் சகஜம்... செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட சுழல்ல சிக்கி மாசத்துக்கு நாலஞ்சு பேராவது செத்திடறாங்க. அதிகாரிங்க நடவடிக்கை எடுக்காம வேடிக்கைப் பார்க்குறாங்க” என்கிறார் நொந்தபடி.

முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்குக் கால்வாய் வழியாகச் செல்லும் தண்ணீர், திண்டுக்கல் அணைப்பட்டி அருகே வைகையிலிருந்து பிரித்துவிடப்படுகிறது. அங்கிருந்து மதுரை மாவட்டம் மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கள்ளந்திரி ஆகிய ஊர்களைக் கடந்து மேலூர்வரை செல்கிறது. மதுரை அழகர்கோவில் பகுதியை அடுத்த கள்ளந்திரி, துக்களப்பட்டி ஊராட்சி அருகில்தான் இப்படியான விபரீதங்கள் அடிக்கடி நடந்து, ஏராளமான உயிர்கள் பலியாகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick