கெட்டுப்போனது கெடிலம் ஆறு! - சர்க்கரை ஆலைக்கு எதிராக பொங்கும் மக்கள்

‘உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம்’ என்ற ஜாக்கிரதையான போர்வையை அணிந்துகொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம், நாளடைவில் மக்கள் வாழ்விடங்களின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் மாறிவிடுகின்றன. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்பட்ட ஒரு தனியார் சர்க்கரை ஆலையும் அப்படியான ஒன்றுதான் என்கிறார்கள் மக்கள்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள இ.ஐ.டி பாரி தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் வாய்க்கால் மூலம் சுமார் ஐந்து கி.மீ தூரம் கொண்டுசெல்லப்பட்டு திருவந்திபுரம் அருகே கெடிலம் ஆற்றில் விடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த ஆற்றுநீர் மாசடைந்து, பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப்போய்விட்டது என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இதனால் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடிநீரும்் பாதிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick