மரபணுப் பயிர் மாற்றம்... ஏமாற்றம்!

விவாதங்களைக் கிளப்பிய விஞ்ஞானிகள்...

ருகாலத்தில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு, அடுத்தகட்டமாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரித்துவந்த இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகள், தற்போது மரபணு மாற்றப்பட்டப் பயிர்களுக்கு எதிராக பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருபக்கம் இது வரவேற்பைப் பெற்றாலும், ‘இதைதானே நாங்கள் இத்தனை காலமாக சொல்லிவந்தோம். எங்கள் வாதங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, விவசாயமே அழியும் சூழ்நிலையில் இப்போதுதான் விஞ்ஞானிகளுக்கு ஞானோதயம் வந்திருக்கிறதா?’ என்று இயற்கை விவசாயிகளும் மரபுவழி விவசாயத்துக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் சீறத் தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பிருக்கும் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? பார்ப்போம்.

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் கதிர்வீச்சு விஞ்ஞானி பி.சி.கேசவன் ஆகியோர் இணைந்து சமீபத்தில் ‘கரன்ட் சயின்ஸ்’ இதழில், ‘நீடித்த, நிலையான உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கான நவீனத் தொழில்நுட்பங்கள்’ என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார்கள். அதில், ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி பருத்தி, இந்தியாவில் தோல்வியடைந்துவிட்டது. பி.டி பருத்தியால், விவசாயிகளுக்குப் பலன்கள் எதுவும் கிட்டவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது’ என்ற ரீதியில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் பயிர்களுக்கு எதிராக விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. அதைப் படித்த பலரும், ‘பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சுவாமிநாதனா இப்படி ஒரு கட்டுரையை எழுதியது!’ என்று ஆச்சர்யப்பட்டார்கள். இன்னொரு பக்கம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவான விஞ்ஞானிகள் தரப்பு சுவாமிநாதன் மீது அதிருப்தியடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick