பாலமேடு... அலங்காநல்லூர்... அவனியாபுரம்... களைகட்டும் ஜல்லிக்கட்டு!

தைப் பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவது, வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்துவது என ஏரியாக்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிருக்கும் காளைகளுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்குதல், மாடுபிடி வீரர்களின் பெயர்களைப் பதிவுசெய்தல் போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

பாலமேடு ஜல்லிக்கட்டு 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான மைதானம் தயார் நிலையில் உள்ளது. பார்வையாளர்கள் அமர புதிய நிரந்தர கேலரி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த, பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் வேலுவைச் சந்தித்தோம்.

“சோழவந்தான் எம்.எல்.ஏ தொகுதி நிதி மூலம் சிமென்ட் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பித்து, மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த முறை, கூடுதலாக ஒரு மணி நேரத்தை அரசு ஒதுக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு விழாக் குழு, எம்.எல்.ஏ மாணிக்கத்துடன் சென்று தமிழக முதல்வரைச் சந்தித்து அழைத்துள்ளோம்” என்றார் உற்சாகத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick