ஐடியா அய்யனாரு!

பேட்ட, விஸ்வாசம் பரபரப்புகளுக்கு இடையே பொங்கலோ பொங்கல் நெருங்கிவிட்டது. சரி, மணக்கும் பொங்கலில் கொஞ்சம் அரசியல் முந்திரியைத் தூவலாம் என்று தமிழக அரசியல்வாதிகளிடம் பொங்கல் வாழ்த்துகள் கேட்டோம். அவர்கள் சொன்ன வாழ்த்துச் செய்திகள் இதோ...

அமைச்சர் செல்லூர் ராஜு
ர்கூடி பொங்கல் வைப்பதால் எழுகிற நெய், ஏலக்காய் நறுமணங்கள்... மனித மனத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. இந்த நறுமணத்தை சுவாசிக்கும் எதிர்க்கட்சியினரும் மனம் மாறி எடப்பாடி அண்ணனின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். கூடாத கூட்டணிகளும் சேர்ந்துவரும். அதேசமயம் பொங்கி வரும் பொங்கல், ‘ஓரளவு மேல் நாம் பொறுமை காக்க மாட்டோம்’ என்பதை எதிரிகளுக்கு உணர்த்தும் குறியீடு என்பதையும் மறந்துவிட வேண்டாம் என்று சொல்லி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick