மோடி பராக்... பராக்... கோயில் நகரைக் குறிவைக்கும் பி.ஜே.பி!

ஜா புயல் பேரழிவைப் பார்வையிடக்கூட தமிழகத்தை எட்டிப்பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 27-ம் தேதி மதுரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தை பி.ஜே.பி புறக்கணிக்கிறது என்ற இமேஜை மாற்றுவதற்கான முயற்சிகள் பி.ஜே.பி தரப்பில் வேகமெடுத்துள்ளன. கூடவே, தங்களுக்கு சென்டிமென்டான கோயில் நகரமான மதுரையில், தங்கள் கட்சியை நிலைநிறுத்த பிரதமரின் வருகையைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறார்கள், தமிழக பி.ஜே.பி-யினர்.

ஜனவரி 27-ம் தேதி மதுரைக்கு வரவிருக்கும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை - மதுரை பகல் நேர தேஜஸ் ரயிலையும் தொடங்கி வைக்கிறார். மோடியின் மதுரை வருகை, பி.ஜே.பி-யினரை உற்சாகப்படுத்தியுள்ளது. வணிகர்கள், சவுராஷ்டிரா சமூகத்தினர் ஆகியோர் கணிசமாக இருக்கும் மதுரைக்கு மோடி வருவது, தங்கள் கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என்று நம்புகிறார்கள் அவர்கள். இதன் தொடர்ச்சியாகவே, ‘புதிய திட்டங்களைத் தொடங்குகிறோம் என்ற பெயரில், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இருந்து பிரதமர் தொடங்குகிறார்; வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பி.ஜே.பி வேட்பாளர் பட்டியலில் மதுரையும் இடம் பிடிக்கும்’ என்றெல்லாம் பேச்சுகள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick