அப்போலோவில் அன்பழகன்... கோபாலபுரத்தில் தயாளு... மகள் வீட்டில் மு.க.முத்து! | DMK leaders illness issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அப்போலோவில் அன்பழகன்... கோபாலபுரத்தில் தயாளு... மகள் வீட்டில் மு.க.முத்து!

நலம் பெற உருகும் தி.மு.க தொண்டர்கள்...

“எங்களின் முதுமையால் கழகத்துக்கு குறை ஏற்படுமானால், அந்தக் குறையை மாற்றுவதற்கு, என் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு ஸ்டாலினைப்போல ஓர் இளைஞர் கிடைத்திருக்கிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...” - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினை முன்மொழிந்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உதிர்த்த வார்த்தைகள் இவை. அப்படிச் சொன்னவர்தான் இப்போது முதுமையின் தாக்கத்தால் அப்போலோ மருத்துவமனையில் முடங்கிக்கிடக்கிறார். இன்னொரு பக்கம், முதுமைக் காரணமாக உடல் நலம் குன்றி அரைகுறை நினைவுகளுடன் கோபாலபுரம் வீட்டில் தயாளு அம்மாளும், மகள் தேன்மொழி வீட்டில் மு.க.முத்துவும் முடங்கிக்கிடக்கிறார்கள். 

‘என் 18 வயதில் துணைக்கு வந்த நண்பன்’ என்று கருணாநிதியால் சிலாகிக்கப்பட்ட பேராசிரியர் அன்பழகன், நண்பர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே சோர்வடைந்து விட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பே அவருக்கு உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அடிக்கடி காய்ச்சல், சளித்தொல்லைகள் ஏற்பட்டன. கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், “தலைவரின் சிலை திறப்பு விழாவுக்கு வந்தே தீருவேன்” என்று சொல்லியபடி, விழாவிலும் கலந்துகொண்டார். டிசம்பர் 19-ம் தேதி அன்பழகனின் 97-வது பிறந்த தினத்தன்று அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். அடுத்தடுத்த நாள்களில் அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 28-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருக்கிறார். “வயது முதிர்வால் ஏற்படும் தொந்தரவுகள் அதிகரித்துவிட்டன. நுரையீரலில் சளி தங்கியிருப்பதால் மூச்சுவிடுவதற்குச் சிரமப்படுகிறார். தொடர்ந்து காய்ச்சலும் ஏற்பட்டது. நுரையீரலில் உள்ள சளியை அகற்றும் சிகிச்சை ரிஸ்க் என்பதால், அந்த சிகிச்சை வேண்டாம் என்று பேராசிரியரின் குடும்பத்தினர் சொல்லிவிட்டார்கள். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளதால், டியூப் மூலம் சிறுநீர் வெளியேற்றம் நடக்கிறது. உணவும் டியூப் வழியாகவே செலுத்தப்படுகிறது. பத்து நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை, ஜனவரி 7-ம் தேதிதான் சாதாரணப் பிரிவுக்கு மாற்றினார்கள். கருணாநிதியின் மறைவுதான் அவரை மிகவும் சோர்வுறச் செய்துவிட்டது” என் கிறார்கள் அன்பழகனுக்கு நெருக்கமானவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick