கண்ணீரில் கரும்பு விவசாயிகள்! பொங்கல் நெருங்கிவிட்டது... சொன்னதைச் செய்வாரா அமைச்சர்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் தை பிறக்கும்போதும் கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் வழி பிறப்பதே இல்லை. இனிக்கும் கரும்பை சாகுபடி செய்யும் இந்த விவசாயிகள், ஒவ்வோர் ஆண்டு பொங்கலையும் கசப்புடனே கடந்துபோகிறார்கள். அவர்களுக்குத் தரவேண்டிய கரும்புக்கான பாக்கித்தொகை ரூ.1,650 கோடியை, தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் தர மறுப்பதே இதற்குக் காரணம்.

தமிழகத்தில் 24 தனியார் கரும்பு ஆலைகளும், 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சர்க்கரை ஆலைகளும் இயங்கிவருகின்றன. தனியார் சர்க்கரை ஆலைகள் தமிழகக் கரும்பு விவசாயிகளிடம் கரும்பு வாங்கிக்கொண்டு, அதற்குரிய பணத்தைத் தராமல் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளன. இதனால், ஜனவரி 4-ம் தேதி சென்னையில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick