பாலமா... வேகத்தடையா?

காலின் அளவுக்குச் செருப்பு வாங்குவதை விட்டுவிட்டு, செருப்புக்கேற்ற அளவில் காலை வெட்டும் காரியத்தைச் செய்திருக்கிறது, தமிழக நெடுஞ்சாலைத்துறை. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தைப் பார்த்து, திருப்பூர்வாசிகள் இப்படித்தான் தினமும் திட்டித்தீர்க்கிறார்கள்.

பல லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட திருப்பூர் நகரத்தில், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். எந்தச் சாலையையும் அகலப்படுத்த முடியாத அளவுக்கு நகர்மயமாக்கல் தீவிரமாகியிருக்கிறது. அதனால், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது திருப்பூர். இதற்குத் தீர்வு காண்பதற்குத்தான், இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. மொத்தம் 1,600 மீட்டர் நீளத்துக்குப் பாலம் கட்டத் திட்டமிடப்பட்டு, 43 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இப்போது, அங்கே பாலம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது; ஆனால், பாலத்தின் நீளம் மட்டும், 1600 மீட்டரிலிருந்து, 671 மீட்டர் ஆகக் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்கள் ஒரு புறமிருக்க, 1600 மீட்டர் நீளமுள்ள பாலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.43 கோடியையும் இந்தப் பாலத்துக்கு செலவழித்துள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick