ஹரிணி கிடைச்சாச்சு!

‘ஹரிணி கிடைச்சாச்சு…’

- செய்யூர் காவல் நிலையத்தில் அவளுடைய உறவினர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். ஹரிணிக்கு பரிசுப் பொருள்கள் கொடுப்பது, ஹரிணியுடன் புகைப்படம் எடுப்பது, ஹரிணிக்கு கேக் ஊட்டுவது என்று விழாக்கோலம் பூண்டது செய்யூர் காவல் நிலையம்!

கடந்த 21.10.18 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், “ஹரிணி கிடைக்கலன்னா மூணு பேரு உசுரும் போவும்” என்கிற தலைப்பில் குழந்தை ஹரிணி கடத்தப்பட்டது குறித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹரிணியின் அம்மா காளியம்மாளிடம் பேசினோம். நிலைகொள்ளாத மகிழ்ச்சியிலிருந்த அவருக்கு கைகால் ஓடவில்லை... “குழந்தை தொலைஞ்சபோது எல்லோரும் எனக்கு ஆறுதல் சொன்னாங்க. ஜூனியர் விகடன்ல இருந்து வந்து நீங்கக்கூட ரொம்ப தைரியம் சொன்னீங்க. ரெண்டு நாளைக்கு முன்னகூட சொந்த ஊருக்குப் போனப்ப ஹரிணியோட விளையாடுன மரத்தடி ஊஞ்சலைப் பார்த்து, எனக்கு அழுகை வந்துடுச்சு. மரத்துல முட்டிக்கிட்டு ஓன்னு அழுதேன். ஹரிணி திரும்பக் கிடைக்காமல் போயிருந்தா நான் உசுரோட இருந்திருப்பேனான்னு தெரியலை. ‘குழந்தை கிடைக்காம நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன். அப்படிப் போனா என் உசுருதான் போகும்’னு சபதத்தோடதான் இத்தனை நாளா இங்கே கழிச்சேன். கடந்த மூணு மாசத்துக்கு மேல மழை, குளிர், கொசுக்கடி, பசின்னு எவ்வளவு கஷ்டம் வந்தப்பவும் இந்த இடத்தை விட்டு நகரலை. போலீஸ்காரங்களே என் நிலைமையைப் பார்த்திட்டு தேடுறதை தீவிரப்படுத்தினாங்க. சுத்துப்பட்டுல மக்கள் பலரும் எனக்கு நிறைய உதவினாங்க. இத்தனை நாளா பக்கத்துல வண்டிக்கடையில சாப்பிட றதுக்குகூட அவங்க காசு வாங்கிக்கலை. ‘குழந்தை கிடைச்சப் பின்னாடி எங்களுக்கு விருந்து சமைச்சு போடுங்கம்மா’ன்னு கடைக்கார அண்ணன் சொல்லிட்டாரு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick