கலவர பூமியான கடவுளின் பூமி!

டவுளின் பூமி, கலவர பூமியாகியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான கேரளத்தில் வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. வெளியே தலைகாட்டவே மக்கள் அச்சப்படுகிறார்கள். யாரை நோவது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்கள் கேரள மக்கள்.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பனை வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதில் இடது ஜனநாயக முன்னணி அரசு உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் பல லட்சம் பெண்கள் பங்கேற்ற ‘வனிதா மதில்’ என்ற மனிதச்சங்கிலி வடிவிலான போராட்டத்துக்கு மறுநாள், 45 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இது தவிர போலீஸ் பாதுகாப்பு ஏதும் இல்லாமல், மேலும் ஒரு பெண் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதாகவும் தகவல் வெளியானது. கொல்லத்தைச் சேர்ந்த தலித் மகிளா ஃபெடரேஷன் அமைப்பைச் சேர்ந்த மஞ்சு, இதுகுறித்து தன் முகநூல் பக்கத்தில், ‘ஒரு முதிய பெண்போல வேடமிட்டு, சபரிமலைக்குச் சென்றுவந்தேன்’ என்று குறிப்பிட்டு, அதற்கான வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், சில மணி நேரம் கழித்து, தன் முகநூல் பக்கத்திலிருந்து அதை அவர் நீக்கிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick