கொடும் பாலையான கோடியக்கரை சரணாலயம்! - கஜா கலைத்த வனம்... மீட்குமா அரசு?

படங்கள்: பா.பிரசன்னா

ஜா கலைத்துப்போட்ட டெல்டா, இன்னும் முழுமையாக மீளவில்லை. பல இடங்களுக்கு மின்சாரமே இன்னும் வரவில்லை. தீராத் துயரில் தவிக்கிறார்கள் மக்கள். மனிதர்களுக்கே இப்படியெனில், விலங்குகளின் நிலை என்னவாகியிருக்கும்? கஜா புரட்டிப்போட்ட கோடியக்கரை சரணாலயம், அழிவின் பாதிப்பிலிருந்து துளியும் மீளவில்லை. கஜாவுக்கு முன்பு வரை வனத்தை நிறைத்திருந்த பறவைகள் உட்பட வனவிலங்குகளின் தடத்தையே அங்கு இப்போது பார்க்க முடியவில்லை. மொத்த வனமும் அழிந்து, ஒரு பாலைவனம்போல பரிதாப நிலைக்கு மாறியிருக்கிறது சரணாலயம். 

வங்கக் கடலோரம் கோடியக்கரையில் 17.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கிறது கோடியக்கரை பறவைகள் மற்றும் வன விலங்குகள் சரணாலயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick