பல் இளிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்! - தென்மண்டலத்தில் ஓராண்டு கடந்தும் நீதிபதி இல்லை

நாட்டின் இயற்கை வளங்களைக் காக்க விரும்பும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் இறுதி நம்பிக்கையே தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்தான். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயத்தை, ‘நிதி மசோதா 2107’ மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதன் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்தது மத்திய அரசு. இந்த நிலையில்தான், சென்னையில் இருக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு, கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் நீதிபதி மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் நியமிக்கப்படவில்லை. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே மத்திய பி.ஜே.பி அரசு இதுபோன்று அலட்சியம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick