சூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன்! - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி

ண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உயர்கல்வித் துறைக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்சநிலையை அடைந்துள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான கே.பி.அன்பழகனுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே நடைபெறும் மோதல் இதுவரை உயர் கல்வித் துறையில் நடக்காத ஒன்று என்கிறது கிண்டி வட்டாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.ராஜாராமின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு மே 26-ல் முடிவடைந்தது. துணைவேந்தர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட    எம்.பாஸ்கரன் குழு, ஆர்.எம்.லோதா குழு ஆகியவை சர்ச்சையில் சிக்கிப் பாதியிலேயே கலைக்கப்பட்டன. இறுதியாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை புதிய துணைவேந்தராகத் தேர்வுசெய்தது. அதன்படி 2018, ஏப்ரல் 5-ம் தேதி புதிய துணைவேந்தராக சூரப்பாவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றது முதலே உயர் கல்வித்துறைக்கும் துணைவேந்தருக்குமான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கின என்கிறார்கள் பல்கலைக்கழக வட்டாரத்தில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick