பாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்? | 16 persons imprisonment for Thittagudi students rape case - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

பாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்?

“கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிய 16 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது. அதேசமயம், பல பிரமுகர்களை வழக்கில் சேர்க்காமல் போலீஸார் காப்பாற்றியுள்ளனர்” என்று குற்றம்சாட்டுகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7-வது மற்றும் 8-வது வகுப்பு படித்துவந்த இரண்டு சிறுமிகள் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி காணாமல்போயினர். அவர்களின் பெற்றோர் திட்டக்குடிக் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் வடலூரில், பாலியல் தொழில் செய்துவந்த சதிஷ்குமார் என்பவரிடமிருந்து இரு மாணவிகளையும் மீட்டனர். மாணவிகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.