ஸ்டாலினுக்கு வலை! - இது மோடிக்கு கைவந்த கலை...

“வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவோம். தமிழகத்தில், பழைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது கதவுகள் திறந்தே இருக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி ‘வலைவிரித்து’ப் பேசிய வார்த்தைகள்தான், தற்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். பி.ஜே.பி-க்கு எதிரான மெகா கூட்டணியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்துவரும் நிலையில், பி.ஜே.பி அந்தக் கூட்டணியைக் குழப்பியடிக்க அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு வியூகம் வகுக்கவே இப்படி ஒரு தந்திரமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி, வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். அந்த வகையில் மூன்றாவது கட்டமாக ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் கடந்த 10-ம் தேதி அவர் உரையாடினார். அப்போது அரக்கோணம் தொகுதியில் பணப்பாக்கம் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ், ‘வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ரஜினி, கமல் இதில் யாருடன் பி.ஜே.பி கூட்டணி வைக்கும்?” என்று கேட்டார் இந்தக் கேள்விக்குத்தான் மேற்கண்ட பதிலை மோடி அளித்திருக்கிறார்

பிரதமர் மோடி தனது பதிலில், ‘வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தைக் கடைப் பிடிப்போம்’ என்பதும் ‘பழைய நண்பர்களுக்குக் கதவுகள் திறந்தே இருக்கும்’ என்பதும் தி.மு.க-வைக் குறிவைத்து வீசப்பட்டிருக்கும் வலை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick