ரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்! | Rajini's secret Six Operation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

ரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்!

- சூரஜ்

“நான் கொலை காண்டுல இருக்கேன்...” - பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும் ‘பேட்ட’ படத்தில் ரஜினியின் பன்ச் வசனம் இது. உண்மையில்,  ரஜினி இப்போது அப்படிதான் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், ரசிகர் மன்ற விவகாரங்கள்தான். இதற்காக, ‘சீக்ரெட் சிக்ஸ் ஆபரேஷன்’ என்கிற ஒன்றை ஆரம்பித்துள்ளார் ரஜினி!

ரஜினியும், அவரின் குடும்பத்தினரும் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அமெரிக்கா கிளம்பிச் சென்றனர். அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு, ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆகிய இரண்டு பதவியிலும் இருந்துவந்த கடலூர் இளவரசனிடம், ‘நான் உங்களை மீண்டும் கூப்பிடும்போது வந்தால் போதும்’ என்பதை நாசூக்காகச் சொல்லிவிட்டுப் பயணமானார் என்று கூறப்படுகிறது. மன்ற நடவடிக்கைகளில் அதுவரை இளவரசனுடன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜசேகர் இருவரும் பக்கபலமாகச் செயல்பட்டுவந்தனர். இப்படியிருக்க, ‘இளவரசனை மட்டும்தான் வரவேண்டாம் என்று ரஜினி சொன்னாரா, இல்லை ராஜசேகர், ஸ்டாலின் ஆகியோரையும் வர வேண்டாம் என்று சொன்னாரா?’ என்று குழம்பினார்கள் மன்ற நிர்வாகிகள். காரணம், ஜனவரி 10-ம் தேதி சென்னை திரும்பினார் ரஜினி. இடைப்பட்ட நாள்களில், ராகவேந்திரா மண்டபம் பக்கம் இளவரசன் தலைகாட்டவில்லை என்கிறார்கள். ஆனால், ஜனவரி முதல் வாரத்தில் ஸ்டாலினும், ராஜசேகரும் அங்கு வந்திருக்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் தென்சென்னை, கடலூர், நெல்லை, தர்மபுரி ஆகிய ஊர்களின் நிர்வாகிகள் சிலர் மாற்றப்பட்டனர். சிங்கப்பூரில் உள்ள ஒரு நிர்வாகி நீக்கப்பட்டார். இவையெல்லாமே மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் பெயரில் அறிக்கையாக வெளியானது. இவருக்குப் பின்னால் ராஜசேகரும், ஸ்டாலினும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க