என்ன செய்தார் எம்.பி? - செங்குட்டுவன் (வேலூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
“வேலூரின் இரு அமைச்சர்களும் கண்டுகொள்வதில்லை!”ஓவியம்: கார்த்திகேயன் மேடி

#EnnaSeitharMP
#MyMPsScore

வேலூரில் வழக்கறிஞராக மட்டுமே அறியப்பட்டவர் செங்குட்டுவன். ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரான சேகர் ரெட்டி ஆதரவுடன் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதன்பிறகு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர், அரசு வழக்கறிஞர் என அடுத்தடுத்து பதவிகளில் அமர்த்தப்பட்ட செங்குட்டுவன், 2014-ல் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். பி.ஜே.பி கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி எம்.பி ஆனார் செங்குட்டுவன். பின்னர், தினகரன் ஆதரவாளராக மாறினார். அதனாலே இவரது தொகுதியில் எந்த அரசுப் பணிகளும் சரிவர நடக்கவில்லை என்கிறார்கள். தொகுதிக்குள் வலம் வந்தோம்.

பாலாறு பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவரான வெங்கடேசன், ‘‘செங்குட்டுவன் இந்த நான்கரை ஆண்டுக் காலத்தில் உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்தார். அதில் 50 சதவிகிதம் அளவுக்கு கமிஷன் பணம் தனிநபர் பாக்கெட்களுக்குத்தான் போனது. வாணியம்பாடி தாலுகா மருத்துவமனைக்கு விபத்து அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டடம் அமைக்க வேண்டும். வாணியம்பாடியில் அரசுக் கல்லூரி கொண்டுவர வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு மலைப் பகுதிகளைச் சுற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்துக்குச் செல்ல நான்கு மணி நேரம் ஆகிறது. ஆனால், வனப்பகுதி வழியே குறுகிய சாலை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அகலப்படுத்தி நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். இவையெல்லாம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. ஒன்றைக்கூட செங்குட்டுவன் நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் எம்.பி ஒருமுறைகூட கலந்துகொண்டதில்லை. மத்திய அரசின் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உதவிகளைப் பெற்றுத்தரவில்லை.

தோல் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரைப் பாலாற்றில் அப்படியே விடுகின்றனர். மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில் பாலாற்றில் உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு அபாயகரமான கழிவுகள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எம்.பி-யிடம் பலமுறை முறையிட்டோம். எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. தொழிலாளர்களுக்காக    இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவரவில்லை. 20 சதவிகிதத் தொழிற்சாலைகளில்தான் தொழிலாளர்களுக்கு பி.எஃப் பிடித்தம் செய்கின்றனர். மீதம் இருக்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்கள். இதையெல்லாம் எம்.பி-க்கு பட்டியல் போட்டுத் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick