தூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம்! - அச்சத்தில் பதறிய காவல் துறை... | Vikatan awards for thoothukudi Martyrs families - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

தூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம்! - அச்சத்தில் பதறிய காவல் துறை...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 13 பேரும், விகடன் நம்பிக்கை விருதுகளின் டாப் டென் மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ‘விகடன் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழாவில் அவர்களின் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். இப்படியொரு தகவலைக் கேள்விப்பட்டதும் தமிழகக் காவல் துறைக்கு வியர்த்துவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விழாவில் கலந்துகொள்ள ஊரிலிருந்து கிளம்பியது தொடங்கி விழா நிறைவடையும்வரை அவர்களைத் தொடர்ந்து கண்காணித்தும், கேள்விகளால் துளைத்தும் படுத்தியெடுத்துவிட்டனர்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கத்தில், ‘விகடன் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜான்சிராணி, ஸ்னோலின், கார்த்திக், மணிராஜன், கந்தையா, தமிழரசன், ரஞ்சித்குமார், ஜெயராமன், செல்வசேகர், காளியப்பன், சண்முகம், அந்தோணிசெல்வராஜ், கிளாஸ்டன் ஆகிய 13 பேரின் குடும்பங்களை, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தோம். இதில் சண்முகம் குடும்பத்தினரைத் தவிர மற்ற 12 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் விழாவுக்கு கிளம்பத் தயாரானார்கள். அந்தத் தகவலை அறிந்த காவல்துறையின் உளவுப் பிரிவினர், சென்னைக்கு அவர்கள் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே அனைவரின் வீடுகளையும் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த நம்மைப் பற்றியும் விவரங்களைச் சேகரித்த போலீஸார், நம்மை தீவிரமாகக் கண்காணித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க