பொய் சொல்கிறார் முதல்வர்! - குற்றம்சாட்டும் டெல்டா விவசாயிகள் | Current connection issue in Gaja affected delta areas - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

பொய் சொல்கிறார் முதல்வர்! - குற்றம்சாட்டும் டெல்டா விவசாயிகள்

ஜா புயலின் கோரத் தாண்டவத்தில் எத்தனை மின் கம்பங்கள் சாய்ந்தன என்பதை அறிவதற்கு முன்பாகவே, “இன்னும் ஒரு வாரத்துக்குள் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார் மின்துறை அமைச்சர் தங்கமணி. புயல் தாக்கி 50 நாள்கள் கடந்த நிலையில், “மின்சாரம் தடைப்பட்ட பகுதிகளில் 99 சதவிகிதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. இ்ன்னும் ஒரு சதவிகிதம்தான் பாக்கி...” என்று கூறினார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், “அத்தனையும் பொய். பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரமே வரவில்லை” என்று சொல்கிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் விவசாயிகள்.

நாகை மாவட்ட மின் வாரிய ஊழியர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, “கஜா புயல் தாக்குதலில் சுமார் 20,000 மின்கம்பங்கள்வரை சாய்ந்திருப்பதாக முதலில் தவறாக மதிப்பிட்டுவிட்டார்கள். ஆனால், கீழே விழுந்தவை, சேதமடைந்தவை என பாதிக்கப்பட்ட மின் கம்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. பெருமளவி லான மின் உபகரணங்கள் பாழாகிக் கிடப்பதும் தாமதமாகவே கண்டறியப்பட்டது. நிலைமையை சீரமைக்க சென்னையிலிருந்து மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன், ஹெலன் ஆகியோரை நியமித்தனர். முறையான திட்டமிடலோ, ஒருங்கிணைப்போ இல்லாததாலும், இயந்திரங்கள் பயன்படுத்தப்படாததாலும், பெருமளவு மனித உழைப்பு வீணானது. சீரமைப்புப் பணிகள் முழுமை அடைவதற்கு முன்பே, ‘எல்லா இடங் களுக்கும் மின்சாரம் வழங்கிவிட்டோம்’ என்று அமைச் சருக்குத் தவறான தகவலை சில அதிகாரிகள் கொடுத்தனர். பல குக்கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் போகவில்லை. ஏராளமான விவசாயிகளுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்தப் பணிகள் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும்” என்றனர்.