அத்துமீறினாரா போலீஸ் இன்ஸ்பெக்டர்? - வனத்துறை - காவல்துறை மோதல் | Clash between police and Forst officers in Kanyakumari - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

அத்துமீறினாரா போலீஸ் இன்ஸ்பெக்டர்? - வனத்துறை - காவல்துறை மோதல்

னத்துறைக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலால் தகித்துக்கிடக்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்ய, பதிலுக்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையினர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்ய... இரு தரப்பினருக்குமான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதிகளில், 48 மலைக் கிராமங்கள் உள்ளன. ஜனவரி 13-ம் தேதி இரவு பொங்கல் விழா கொண்டாடுவதாகக் கூறி, டைசன் என்பவர் உட்பட எட்டுப் பேர், ஜீப்பில் பேச்சிப்பாறை அருகே வனத்துக்குள் செல்ல முயன்றுள்ளனர். அவர்களுக்கு வழிகாட்ட, தச்சமலை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் காணி என்பவரும் உடன் சென்றுள்ளார். இவர்கள் வனத்துக்குள் செல்வதற்காக வனத்துறையின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை. அதனால், பேச்சிப்பாறை ஸீரோ பாயின்ட் செக்போஸ்டில் இவர்களை வனத்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது, ‘நக்ஸல் தடுப்புப் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் சாம்சனின் வழிகாட்டுதலின்பேரில், பொங்கல் விழா நடத்த மலைக் கிராமத்துக்குச் செல்கிறோம்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி, வேளிமலை வனத்துறை அலுவலகத்துக்கு அவர்களை வனத்துறையினர் அழைத்துச்சென்றனர். பிறகு, ‘அத்துமீறி வனத்துக்குள் நுழைந்தது தவறு’ என்று, தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர். மறுநாள் காலை அவர்களை விடுவித்த வனத்துறை, அவர்கள் வந்த ஜீப்பை விடுவிக்கவில்லை.