ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி | Tamilnadu loses 3000 crore With no elected civic bodies - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி

‘மக்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்களா...’ என்ற பீதியில் இரண்டரை வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாமல் இருப்பதால், ஆட்சியாளர்களுக்கு இழப்பு எதுவுமில்லை. ஆனால், ஜனநாயகத்தின் உயிர்நாடியான உள்ளாட்சி அமைப்புகள் இழந்ததோ, ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி 2018, பிப்ரவரி 28-ம் தேதி டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து ரூ.1,390 கோடி நிதி ஒதுக்குமாறு கோரினார். 2018, ஜூன் 20-ம் தேதி, மத்திய பஞ்சாயத்துராஜ் இணை அமைச்சர் புருஷோத்தம் ரூப்லாவைச் சந்தித்த வேலுமணி, நிதி ஒதுக்குமாறு அவரிடம் கோரினார். 2018 செப்டம்பர் 27-ம் தேதி மீண்டும் அருண் ஜேட்லியைச் சந்தித்து ரூ.1,600 கோடி ஒதுக்கும்படி வேலுமணி கேட்டார். இறுதியாக, 2018 டிசம்பர் 26-ம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, ரூ.3,776.20 கோடி ஒதுக்குமாறு வேலுமணி கோரினார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடைபெறாமல் சல்லிக்காசு கூடக் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு கறார் காட்டிவிவிட்டது. இதனால், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன.