சி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார்! - குமுறும் கனகராஜின் அண்ணன் | Palaniswami will get caught if CBI investigates - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

சி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார்! - குமுறும் கனகராஜின் அண்ணன்

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் மரணம் பூதாகரமாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் விவசாயம் செய்து வருகிறார் கனகராஜின் அண்ணன் தனபால். அவரிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே, “என் தம்பி மரணத்தின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் (“முதல்வரைக் கைகாட்டும் கனகராஜ் அண்ணன்” என்று 7.5.17 தேதியிட்ட ஜூ.வி் இதழில் தனபாலின் பேட்டியை வெளியிடிருந்தோம்.) என்று அப்போதே ஜூனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்தேனே... இப்போது பார்த்தீர்களா?”என்று கொட்டித் தீர்த்துவிட்டார் தனபால். சரி, இப்போது என்ன சொல்கிறார் தனபால்?

‘‘எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சமுத்திரம் கிராமம்தான் எங்களின் சொந்த ஊர். நாங்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சரவணன் மூலமாக, 2008-ம் ஆண்டு என் தம்பி கனகராஜ் போயஸ் கார்டனில் வேலைக்குச் சேர்ந்தான். விரைவில் அம்மாவிடமும், சின்னம்மாவிடமும் நன்மதிப்பைப் பெற்று அவர்களின் பர்சனல் டிரைவர் ஆனான். அம்மாவும், சின்னம்மாவும் வெளிமாவட்டங்களுக்குச் சென்றால், என் தம்பிதான் காரை ஓட்டிச்செல்வான். இந்தநிலையில், சேலம் புறநகர் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்துவந்த சரவணனும், என் தம்பியைப்போலவே மர்மமாக கார் விபத்தில் மரணம் அடைந்தார்.