அவள் பெயர் நீத்து. மழலை மாறாத குழந்தை. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்று உறவுகள் சூழக் கழிந்தன அவளது நாள்கள். நீத்துவின் தாய் வினுப்பிரியா. கணவர் ஷயான்தான் வினுவுக்கு எல்லாம். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். கொடநாடு விவகாரம் தொடர்புடை யதாகக் கூறப்படும் விபத்து, ஒரு பாவமும் அறியாத வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்துவின் உயிர்களைப் பறித்துவிட்டது. இவர்களின் மரணங்களிலும் மர்மங்கள் விலக வில்லை.
கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே இருக்கிறது வினுப்பிரியாவின் பெற்றோர் வீடு. வினுப்பிரியாவின் தந்தை சிவசங்கரனிடம் பேசினோம். “என் மகளின் காதல் திருமணத்தில் ஆரம்பத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என் மகளின் ஆசையை நிறைவேற்றவே திருமணம் செய்து வைத்தோம்.