தினேஷ் தற்கொலை ஏன்? - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்! | Dead Kodanad Estate office staff Dinesh Family talks about him - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

தினேஷ் தற்கொலை ஏன்? - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்!

கொடநாடு தொடர்பான மர்ம மரணங்களில் ஒன்று அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷின் தற்கொலை. கொடநாடு கொலை சம்பவத்துக்குப் பின்னர், மூன்று மாதங்கள் கழித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான மர்மங்களுக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. ‘மரணமடைவதற்கு முன்பு மொபைல் போனில் நீண்ட நேரம் ஒருவருடன் தினேஷ் பேசிக்கொண்டிருந்தார். அந்த நபர் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் தினேஷ் தற்கொலை செய்துகொண்டார்’ என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், கோத்தகிரி அருகே உள்ள கெங்கரைதான் கிராமத்தில் இருக்கும் தினேஷின் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.