சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட் | Humans as experimental subjects - A horror report in Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்

ஜீ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ருத்துவத்துறையில் தினந்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு நோயை அழிக்க மருந்து கண்டுபிடித்த நொடியில், இன்னொரு புதிய வைரஸ் உயிர்பெறுகிறது. மருத்துவம் மற்றும் புதிய மருந்துகளின் தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளை எலி, முயல், குரங்குகள் போன்ற விலங்குகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்வது வழக்கம். விலங்குகளில் அந்த மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளைக் கணித்து, அடுத்தகட்டமாக மனிதர்களுக்கும் தந்து சோதிப்பார்கள். விலங்குகளையும் மனிதர்களையும் இதுமாதிரியான மருந்து ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று உலகெங்கும் குரல் எழுந்துவருகின்றன. இதற்கான மாற்று வழிகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இப்படியான சூழலில்தான், கோவையில் இருக்கும் ஒரு மருந்து நிறுவனம், அப்பாவி மனிதர்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதாக பகீர் புகார் எழுந்துள்ளது

கோவை மேட்டுப்பாளையும் சாலையில் இருக்கிறது ஸ்பினோஸ் மருந்து ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் விளிம்பு நிலை மக்களைக் குறிவைத்து மருத்துவப் பரிசோதனையைச் செய்கிறது; இதற்காக மிகப் பெரிய  நெட்வொர்க்கே இயங்குகிறது என்று நமக்குத் தகவல் கிடைத்தது. இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குச் சென்றவர்கள் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள் என்கிற தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.