“நீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிப்பார்களா கலெக்டர்கள்?” | HC order about Grama Sabha meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

“நீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிப்பார்களா கலெக்டர்கள்?”

ஜனவரி 26-ல் கிராம சபைக் கூட்டம்

நாட்டின் முதுகெலும்புகளாகத் திகழும் கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்பெற வேண்டும்; கிராம சபையில் அதிகமான மக்கள் பங்குபெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றிவரும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ‘வரும் காலத்தில் தமிழகத்தில் அனைத்துக் கிராம சபைக் கூட்டங்களும் சட்டப்படி முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டு, முறையாக நடக்க வேண்டும்’ என்று அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. அரசு விதிகளின்படி, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கட்டாயமாக அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, இப்போதே கிராம சபை கூட்டம் தொடர்பான முன்னறிவிப்பு பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இது குறித்து திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பாகல்வாடி ஊராட்சியைச் சேர்ந்தவரும் உள்ளாட்சிகள் தொடர்பான சமூகச் செயற்பாட்டாளருமான குருநாதனிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க