உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - கடந்த கால நிறைகுறைகள் என்ன? - வருங்காலத்தில் செய்ய வேண்டியது என்ன? | Global Investors Meet 2019 in Chennai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - கடந்த கால நிறைகுறைகள் என்ன? - வருங்காலத்தில் செய்ய வேண்டியது என்ன?

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

னவரி 23, 24 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தமிழகத்துக்கு முதலீடுகள் வந்துள்ளதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேசமயம் 2015-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் சரி... இப்போது நடக்கும் மாநாட்டிலும் சரி... விமர்சனங்களும் புகார்களும் எழாமல் இல்லை. இதோ நிறைகுறைகளுடன் அவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்!

இப்போது தொடங்கியிருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக தமிழக அமைச்சரவை, ஏற்கெனவே இருமுறை கூடி 31 தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 16 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வெளிநாடு மற்றும் உள்நாட்டில் 250 நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன. அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், தென்கொரியா, தைவான், துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குத் தமிழக அரசின் சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.