“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது!” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி | Sasikala Rules Violated issue in Bengaluru prison - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது!” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சிறப்புச் சலுகைகள் பெற்றது உண்மைதான் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், வேறு சிறைக்கு சசிகலா மாற்றப்பட உள்ளார், அவருக்கு இனி பரோல் கிடைக்காது என்பது போன்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில், 2017 பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். அங்கு, விதிகளை மீறி சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், அதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபா பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார். அது தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவைக் கர்நாடக அரசு நியமித்தது. வினய்குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். அறிக்கையின் விவரங்களை மிகவும் ரகசியமாகவே கர்நாடக அரசு வைத்திருந்தது.