கனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்! | IAS officers affected for Senior Ministers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

கனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்!

.தி.மு.க அரசில் ‘சக்தி’ வாய்ந்த அமைச்சர்களாக வலம் வருபவர்கள், தங்களின் மாவட்டங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களின் துறை சார்ந்த முக்கியப் பதவிகளில் தங்களுக்கு வளைந்துகொடுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையே பல ஆண்டுகளாக அமரவைத்துள்ளனர். இதனால், தங்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட வாய்ப்புகள் பறிபோவதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் குமுறல் சத்தம் கேட்கிறது.

ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கும், பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பெறுவோருக்கும் மாவட்ட ஆட்சியர் பதவி என்பது லட்சியக் கனவு. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், ஒரு மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லவும் மாவட்ட ஆட்சியர் பதவி தரும் அதிகாரமும், வாய்ப்பும் வேறு எந்தப் பணியிலும் கிடைப்பதில்லை. மேலும், ஆட்சியராகப் பணியாற்றும்போது ‘அள்ளிச் சேர்க்கவும்’ பலர் ஆசைப்படுவது உண்டு.

மாவட்டத்தின் பிரச்னைகள், வளர்ச்சி, தேவைகள் ஆகியவற்றை அறிந்து, அவற்றுக்கேற்ப திறன் படைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியராக நியமிப்பது என்பது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. 2012-க்குப் பின்னர், அதில் பெரிய மாற்றம். அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நினைப்பவர்கள் மட்டுமே, அவர்களின் துறைச் செயலாளராக ஆகமுடியும். அதேபோல, தாங்கள் இட்ட காரியத்தை மாவட்டத்தில் பணிவுடன் நிறைவேற்றுபவர்களை மட்டுமே, ஆட்சியராக வைத்திருப்பது என்பதை எழுதப்படாத சட்டமாகவே அமைச்சர்கள் மாற்றியுள்ளனர்.