கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

கழுகார் பதில்கள்!

எல்.சேவுகபாண்டியன், ராதாபுரம்.
‘தமிழக அரசியல் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப் பதற்காக கொடநாடு விவகாரத்தை வெளிநாட்டுச் சக்திகள் கையில் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை’ என்று உத்தரவாதம் தரமுடியுமா கழுகாரே?

ம்... அவர்கள்கூட இப்படி யோசித்திருக்க வாய்ப்பே இல்லை. அசத்துகிறீர்களே சேவுக பாண்டியன். நீங்கள் ராதாபுரத்தில் இருக்க வேண்டிய ஆளே இல்லை!

@ராஜதிருஞானம்.ஆர்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டி யிட்டால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?


வாஜ்பாய் காலத்தில், இதே பாணியில் ஜெயலலிதா அமைத்த கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை என்பதே நிதர்சனம். தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-க்கு பலவீனங்களே தற்போது அதிகம். அதேபோல, நீங்கள் சொல்லும் கூட்டணிக் கட்சிகளும் ஒவ்வொரு வகையில் பலவீனமாகவே உள்ளன. தி.மு.க அமைக்கவிருக்கும் கூட்டணி, கமல், ரஜினி ஆகியோரின் காய்நகர்த்தல்கள் ஆகியவற்றைப் பொறுத்தே வாய்ப்பு எப்படி என்பதைக் கணிக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க