“நாங்கள் தி.மு.க-வினர்தான்... நட்புரீதியில் உதவி செய்தோம்!” | Kodanad estate crime issues controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

“நாங்கள் தி.மு.க-வினர்தான்... நட்புரீதியில் உதவி செய்தோம்!”

மனோஜ், ஷயான் ஜாமீன் சர்ச்சை

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை விவகாரம், ஏற்கெனவே ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கியிருக்க, அதில் தொடர்புடைய நபர்கள் ஜாமீன் பெறுவதற்கு தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் உதவி செய்தார்கள்... அவர்கள் தி.மு.க-வின் பிடியில்தான் இருக்கிறார்கள்’ என்று அ.தி.மு.க-வினர் அம்புவிட ஆரம்பித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படத்துக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் துணைச் செயலாளர் ராஜ்சத்யன் புகார் அளித்தார். அதையடுத்து, ஆவணப்படத்தில் பேட்டியளித்த ஷயான், மனோஜ் ஆகியோரை, தமிழக போலீஸார் டெல்லியில் கைது செய்து ஜனவரி 14-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்த நீதிபதி, 18-ம் தேதியன்று ரூ.10,000 பிணைத்தொகையுடன் தலா இருநபர் ஜாமீனில் அவர்களை விடுவிக்கவும் செய்தார்.