“10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்!” - கோர்ட் படியேறிய தி.மு.க | DMK case filed in HC against for 10 percentage reservation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

“10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்!” - கோர்ட் படியேறிய தி.மு.க

‘‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம், இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி மாளிகையில் தூங்குகிறது. ஆனால், 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டத் திருத்தமோ... ஒரே நாளில் கையெழுத்தாகிறது. இது ஒடுக்கப் பட்ட மக்களின் மீதான தாக்குதல். இதை ஒருபோதும் நிறைவேற்ற விடமாட்டோம்’’ என்று நீதிமன்றப் படியேறியிருக்கிறது தி.மு.க. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குகள் பாயும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முற்பட்ட வகுப்பினரில் பொருளா தார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப் பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அமலுக்கும் வந்துவிட்டது.