எத்தனையோ வழக்குகளைப் பார்த்தவன்... தவிடுபொடியாக்குவேன்! | Edappadi Palaniswamy speech about Kodanad Estate crime issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

எத்தனையோ வழக்குகளைப் பார்த்தவன்... தவிடுபொடியாக்குவேன்!

பொங்கித் தீர்த்த எடப்பாடி பழனிசாமி...

கொடநாடு விவகாரம் பற்றி எரிகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர்மீது கூறப்பட்டிருக்கும் இந்தச் குற்றச்சாட்டை நாடே உற்றுநோக்கும் நிலையில், இதுவரை இதுபற்றிப் பெரியதாக எதுவும் வாய்திறக்காமல் இருந்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான், ஜனவரி 19-ம் தேதி பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொங்கித்தீர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் புகழ் பாடவேண்டிய அந்தப் பொதுக்கூட்டம், ‘கொலைபழி விளக்க’ப் பொதுக்கூட்டமாகவே நடந்துமுடிந்தது. அவரது உள்ளக் குமுறலை அப்படியே இங்கு தருகிறோம்...

“எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதா வையும் ஆட்சி செய்யவிடாமல் சிக்கல்களை ஏற்படுத்திய அரக்கர்கள் தி.மு.க-வினர். அதேபோல இப்போது என் மீதும் வழக்கு போடத் துடிக்கிறார்கள். நான் கிளைக் கழகச் செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் பதவிவரை உயர்ந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலின் அப்படிப்பட்டவர் அல்ல. அப்பாவை முன்னிறுத்தி அரசியல் செய்பவர் அவர். எனது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்தார். ஒன்றுமே முடியவில்லை. அதனால், இன்றைக்குப் பொய் வழக்கு போடுகிறார். நான் முதலமைச்சராக இருக்கிறேன். அப்படி இருந்தும் என்னிடமே வேலையைக் காட்டுகிறார். எத்தனையோ பொய் வழக்குகளைச் சந்தித்தவன் நான். கட்சிக்காக ஏழு முறை சிறை சென்றிருக்கிறேன். இந்த வழக்கை என்னால் சந்திக்க முடியாதா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க