பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால்... அ.தி.மு.க-வுக்கு சுகமா? சுமையா? | Discuss about BJP alliance ADMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால்... அ.தி.மு.க-வுக்கு சுகமா? சுமையா?

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கைகோக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க முகாமிலிருந்து பி.ஜே.பி-யை நோக்கி அடுத்தடுத்துப் பாயும் விமர்சன அம்புகள் இந்த இரு கட்சிகளிடையே அனலை மூட்டியுள்ளன.  

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளைப் போட ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில்தான், “தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிதான் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கும். தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி சேர மாட்டோம்” என்று முதல்வருமான பழனிசாமி சமீபத்தில் பேசினார். அடுத்ததாக, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, “பி.ஜே.பி-யைச் சுமந்துகொண்டு தமிழகத்தில் காலூன்ற வைக்க, அ.தி.மு.க என்ன பாவமா செய்தது? பி.ஜே.பி தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” என்று அனலைக் கக்கினார். இந்தப் பேச்சால், இரு கட்சிகளுக்கும் இடையே சூடு அதிகரித்துள்ளது. பி.ஜே.பி ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி, “அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி வைத்தால்தான், தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்ற முடியும்” என்று சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதற்குதான், அப்படியொரு காட்டமான பதில் தம்பிதுரையிடமிருந்து வந்தது என்று சொல்கிறார்கள், அ.தி.மு.க-வினர்.

இரு கட்சிகளுக்கும் இடையே இப்படியாகத் தொடரும் விவகாரம் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.