1989-2019... கொல்கத்தாவில் திரும்பிய வரலாறு! | Mamata Banerjee to host United India Rally - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

1989-2019... கொல்கத்தாவில் திரும்பிய வரலாறு!

முப்பது ஆண்டுகளில் வரலாறு திரும்பி நிற்கிறது.

“கு
ரைக்கிற நாய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று அன்று சொன்னார், பிரதமர் பதவியில் அதிகாரமாக வீற்றிருந்த காங்கிரஸின் வாரிசு ராஜீவ் காந்தி.

“திருடனைப் பார்த்துதான் நாய்க்குரைக்கும்” என்று பதிலடி கொடுத்தார் இந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியாகத் திரட்டிக்கொண்டிருந்த மக்கள் தொண்டர் வி.பி.சிங்.

முடிவில்... “வீழ்த்தவே முடியாது” என்று கருதப்பட்ட ராஜீவ் காந்தி, 1989-ல் வீழ்த்தப்பட்டார். ஆட்சியை இழந்தது காங்கிரஸ். ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல்தான் அதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது. நாடு தழுவிய பெருங்கூட்டணியின் தேர்வாக... வி.பி.சிங் பிரதமர் பதவியேற்றார்.

இது, 2019. முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

அன்று ஃபோபர்ஸ் பீரங்கி... இன்று ரஃபேல் விமானம். அன்று காங்கிரஸ் மீது குற்றப்பத்திரிகை வாசித்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பி.ஜே.பி., இன்று குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அன்று குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ், இன்று குற்றப்பத்திரிகை வாசிப்பவர்களின் பட்டியலில் கைகோத்து நிற்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க