எப்படி இருக்கிறார் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணி? | HIV-Infected Blood Given to Pregnant Woman - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

எப்படி இருக்கிறார் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணி?

புதிய பிரச்னை வரும்போது பழைய பிரச்னையை மறந்துவிடுவது வழக்கமாக உள்ளது. இதுவே தவறு செய்பவர்களுக்குச் சாதகமாகவும் அமைந்துவிடுகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாசிடிவ் ரத்தத்தை ஏற்றிய விவகாரம் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்தது. ஆனால், அடுத்தடுத்தப் பரபரப்புகளில் அதை மறந்து விட்டோம். எப்படி இருக்கிறார் அந்தப் பெண்மணி?

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 17-ம் தேதி மாலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், “குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. 1.75 கிலோ கிராம் எடையில் ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனாலும், 45 நாள்களுக்குப் பிறகுதான் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய முடியும்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால், குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளது அப்பெண்ணின் குடும்பம். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க