உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்... | Vedaranyam saltern land affected by Gaja cyclone - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக முக்கியத் தொழிலாக விளங்குவது உப்பு உற்பத்திதான். தமிழகத்தின் முக்கிய உப்பள மண்டலங்களில் முக்கியமானது வேதாரண்யம். ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து, காந்தியடிகள் தண்டியில் உப்புச் சத்தியாகிரகம் நடத்தியபோது, ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது, வேதாரண்யத்தில்தான்.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிவந்த வேதாரண்யத்தின் உப்பளங்கள், கஜா புயலில் உருக்குலைந்துவிட்டன. உப்பளங்களில் கடல்சேறு உட்புகுந்த நிலையில் அரசின் உதவிகள் கிடைக்காமல், உப்பு உற்பத்தியை மீண்டும் எப்படித் தொடங்குவது என்று உப்பு உற்பத்தியாளர்களும், வேலை இழந்த நிலையில் தொழிலாளர்களும் கலங்கித் தவிக்கிறார்கள்.