பீலேவை லண்டனில் சந்தித்த தம்பிதுரை! - ஆணையத்தில் வெளியான ரகசியம் | Thambidurai appears on Arumugaswamy Commission - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

பீலேவை லண்டனில் சந்தித்த தம்பிதுரை! - ஆணையத்தில் வெளியான ரகசியம்

“ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரை, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை லண்டனில் வைத்து ரகசியமாகச் சந்தித்ததை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. சுகாதாரத்துறை செயலாளர் ஏற்கெனவே இரண்டு முறை ஆஜராகிச் சாட்சியம் அளித்துவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 21-ம் தேதி காலை ஆஜரானார். அவரிடம் முதலில் ஆணையத்தின் தரப்பில் விசாரிக்கப்பட்டது. பின்னர், சசிகலா தரப்பிலும், கடைசியாக அப்போலோ மருத்துவமனையின் தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை ஆணையத்தில் ஆஜராகிச் சாட்சியம் அளித்த பலரும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தெரியும் என்று கூறியிருந்தனர். இதனால், விஜயபாஸ்கரின் வாக்குமூலத்தைப் பெரியதாகப் பலரும் எதிர்பார்த்தார்கள்.