லயோலா விவகாரம்... நடந்தது என்ன? | Loyola College art exhibition controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

“லயோலா கல்லூரியை இழுத்துமூட வேண்டும்; கல்லூரிக்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்” என்று கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக பி.ஜே.பி தலைவர்கள். காரணம், ஓவியக் கண்காட்சி.

`வீதி விருது விழா’ என்ற பெயரில் நலிந்த கலைஞர்களைக் கௌரவப்படுத்தும் பணியை ஆறாவது ஆண்டாகச் செய்துவருகிறது சென்னை லயோலா கல்லூரி. இதன் ஓர் அங்கமாக, ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜனவரி 19, 20 தேதிகளில் நடந்த அந்தக் கண்காட்சியில் ம.க.இ.க ஆதரவாளரான ஓவியர் முகிலன் வரைந்த சில படங்கள் இடம் பெற்றிருந்தன. அதில், `மீ டு’ என எழுதிப் பாரத மாதா படத்தை யும், சஞ்சீவி மலையைப் பிரதமர் மோடி தூக்கிக் கொண்டு போவது போலவும் படம் வரைந் திருந்தார். மேலும், அமெரிக்கா மற்றும் திரிசூலத்துக்கு இடையில் ஊஞ்சல் கட்டிப் பிரதமர் மோடி அகண்ட பாரதக் கனவு காண்பது போலவும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவைதான் பி.ஜே.பி-யினரை ஏகத்துக்கும் சூடேற்றியிருக்கிறது.