மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

கோட்-சூட்டுடன் படுபந்தாவாக வந்த கழுகாரிடம், “தமிழக அரசு கூட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் போயிருந்தீரா... சக்சஸ்தானே?’’ என்று கேட்டோம்.

‘‘சக்சஸா, வெறும் சர்க்கஸா என்பது சில நாள்களில் தெரிந்துவிடும். உதாரணத்துக்கு ஒரேயொரு விஷயம். மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலர், பழைய கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்கள். ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம் என்கிறது தமிழக அரசு. ஆனால், அது ‘ஹண்ட்ரட் ஹேண்ட் சிஸ்டம்’ என்பதாகத்தான் இருக்கிறது. சிங்கிள் விண்டோவுக்குப் பின்னாலிருந்து நூறு கைகள் நீள்கின்றன’ என்று அவர்கள் முணுமுணுத்திருக்கிறார்கள்’’ என்று சொல்லி, மர்மப் புன்னகையை வெளியிட்டார் கழுகார்.

‘‘தேர்தல் செலவுகள் எல்லாம் பலமாகக் காத்திருக்கும்போது, பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்?’’

‘‘உண்மைதான்... தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, செலவு இதையெல்லாம் பேசப்போய், முதல்வர் வீட்டில் பெரிதாக வில்லங்கமே வெடித்திருக்கிறதாம்.’’

‘‘அடடே, விவரமாகச் சொல்லும்.’’

‘‘கடந்த இதழில் தம்பிதுரை தனி ரூட், குழப்பத்தில் ஓ.பி.எஸ், இறுக்கத்தில் இ.பி.எஸ் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அதன் தொடர்ச்சியாக நிறையக் கூத்துகள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, பி.ஜே.பி கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என்று நினைக்கிறார் எடப்பாடி. இது கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். அதனால், ஓ.பி.எஸ் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக அணிதிரள ஆரம்பித்திருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.’’

‘‘தர்மயுத்தத்துக்கு வெற்றியோ!’’

‘‘ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், கூட்டணி விவகாரங்கள், சீட் பேரங்கள் இதெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களைக்கூட, அவருக்கு எதிராகத் திரும்பச் செய்திருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது எடப்பாடி தரப்பு. அவருக்கு இடதும் வலதுமாக இருக்கும் இரண்டு அமைச்சர்களில் ஒருவரே, விரைவில் அவருக்கு எதிராகத் திரும்பினாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். தவிர, தனக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் சீறியதில் ஆடிப்போயிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க