அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு! | Mayawati and Akhilesh Yadav made new alliance for Parliament Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

- சக்திவேல்

த்தரப் பிரதேசத்தை ஆளுக்குப் பாதியாகப் பங்குபோட்டுக்கொண்டு காங்கிரஸின், ‘மெகா கூட்டணி’ கனவைக் கலைத்துப்போட்டு விளையாடுகிறார்கள் மாயாவதியும் அகிலேஷும். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஆளுக்கு 38 தொகுதிகளைப் பிரித்துக்கொண்டவர்கள், போனால் போகிறது என்று ராகுல் காந்தியின் அமேதியையும் சோனியா காந்தியின் ரேபரேலியையும் காங்கிரஸ் கட்சிக்காக விட்டுவைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் காங்கிரஸுக்கு அவர்கள் காட்டியிருக்கும் கரிசனம்!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க, பகுஜன் சமாஜும் சமாஜ்வாதியும் ஆதரவு அளித்தன. அதனால், ‘நாடாளுமன்றத் தேர்தலிலும் நம்முடன் கைகோப்பார்கள்’ என்ற நம்பிக்கையில் இருந்தது காங்கிரஸ். ஆனால், அப்படி நடக்கவில்லை. நம்மூரின் தி.மு.க - அ.தி.மு.க போல வட இந்தியாவில் எதிரெதிர் தளங்களில் பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் களம் கண்டுவருகின்றன. இந்தியப் பிரதமர்களை நாட்டுக்கு அனுப்பும் மிக முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை, இருபது ஆண்டுகள் மாறி மாறி ஆண்ட பெருமைக்குரியவை இந்தக் கட்சிகள். ஆனால், கடந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யின் அசுர வளர்ச்சிக்கு முன்னால் இவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆட்சியை இழந்துவிட்டன. எனவே, ‘இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும், பி.ஜே.பி-யின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும்’ என்ற அஜெண்டாவுடன் புறப்பட்டிருக்கிறார்கள். அதை அடைய அவர்கள் கண்டுபிடித்த வழிதான், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க