“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம் | VCK Conference in Trichy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம்

‘தி.மு.க தலைமையிலான கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு’ என்று வர்ணிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தால் திருச்சி நகரம் திணறிப்போனது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு திருச்சியில் ஜனவரி 23-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குத் தடைவிதிக்கக் கோரி, காவல்துறை ஆணையரிடம் பி.ஜே.பி., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மனுக் கொடுத்திருந்தனர். அதனால், ஆரம்பம் முதலே திருச்சியில் பரபரப்பு நிலவியது. இந்த மாநாட்டுக்காக, திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க தலைவர் .ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, காங்கிரஸ்  சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க