“ஜெயலலிதா இனி குற்றவாளி இல்லை!” - உற்சாகத்தில் அ.தி.மு.க-வினர்... | Jayalalithaa cannot be termed Convicted Person, Madras HC - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

“ஜெயலலிதா இனி குற்றவாளி இல்லை!” - உற்சாகத்தில் அ.தி.மு.க-வினர்...

றந்த பிறகும் சர்ச்சைகளைச் சுமக்கிறார், ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியா, நிரபராதியா என்கிற சர்ச்சை மேலோங்கி இருந்த நிலையில், அவரைக் குற்றவாளி எனச் சொல்லக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த அ.தி.மு.க-வினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.