“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை! | Chennai Book Fair controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

“புத்தகக் காட்சியா... ஜவுளிக்கடையா?” - ஆண்டுதோறும் தொடரும் சர்ச்சை!

மிழகத்தின் பல மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டாலும், சென்னை புத்தகக் காட்சிக்கு இருக்கும் வரவேற்பே தனிதான். இந்த ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சி ஆன்லைன் நுழைவுச் சீட்டு, 800-க்கும் அதிகமான புத்தகக் கடைகள், 17 நாள்கள் விறுவிறு விற்பனை என்று களைகட்டியது. அதேசமயம் ஒவ்வோர் ஆண்டும் தொடரும் சர்ச்சைகளும் புகார்களும் இந்த ஆண்டும் களையப்படவில்லை என்பதுதான் வேதனை.

நுழையும்போதே தொடங்குகிறது பிரச்னை. நுழைவாயிலுக்கும் அரங்குக்குமான தூரம் மிக அதிகம். பார்க்கிங் வசதிக்கு படாதபாடுபட வேண்டியிருந்தது. குடிநீர் இருந்தும் குடிக்க முடியாமல் கானல் நீரானது கதை. அரங்குகளில் நீண்ட வரிசையாக இருந்ததால் புத்தகங்களைக் கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. சம்பிரதாயமாக நடந்த பொதுமேடை நிகழ்ச்சிகளும் பெரியதாக ஈர்க்கவில்லை. வழக்கம்போல கழிப்பிடம் படுமோசம். இவை மட்டுமல்ல... எங்கோ மூலையில் அமைந்திருந்த எழுத்தாளர் சந்திப்பு இடம், நெறிப்படுத்தப்படாத உணவுக் கடைகள் எனப் புத்தகக் காட்சியிலும் வாசகர்கள் சந்தித்த சிரமங்கள் ஏராளம். இவ்வளவு அதிருப்திகளுக்கு இடையேதான் இந்தப் புத்தகக் காட்சியில் 18 கோடி ரூபாய்க்கு 75 லட்சம் நூல்கள் விற்பனையானதாக வெளியிடப்பட்ட தகவல், சர்ச்சையை மேலும் சூடாக்கியுள்ளது.