எடப்பாடி அரசை நீடிக்கவைப்பது ஸ்டாலின்தான்! - தமிழிசை புது வசை | BJP TN Leader Tamilisai Soundararajan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/05/2019)

எடப்பாடி அரசை நீடிக்கவைப்பது ஸ்டாலின்தான்! - தமிழிசை புது வசை

‘‘வெற்றிபெற்றால் அதற்கு எல்லோரும் பொறுப்பு. இந்தத் தோல்விக்கு, தலைவர் என்ற முறையில் நான் பொறுப்பேற்கிறேன்’’ - நிதானமாகப் பேசுகிறார் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன். தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி, ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘இந்தியா முழுக்க ஒரே மாதிரி சிந்திக்கும்போது, தமிழகம் மட்டும் வேறு மாதிரி முடிவு எடுத்திருக்கிறதே?’’

‘‘தமிழகத்தை மேம்படுத்த நினைக் கிறோம். ஆனால், மக்கள் வேறு மாதிரியாக நினைக்கிறார்கள். தமிழகம் கிளர்ச்சி மாநிலமாக இருப்பதைவிட, வளர்ச்சி மாநிலமாக இருக்க வேண்டும். தமிழகம் போராட்டக் களமாக இருப்பதைவிட, பாராட்டத்தக்க களமாக மாற வேண்டும். இங்கு சிலர் கொதிநிலையிலேயே மக்களை வைத்து, குளிர்காய்கிறார்கள். மக்களைக் குறை சொல்ல முடியாது. இப்போது எங்க ளுக்கு இருக்கும் பெரிய கவலையே... தமிழகம் ஏன் இன்னும் எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தான்.’’